புதிய ஏற்பாடு கண்ணோட்டம்
புதிய ஏற்பாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நற்செய்திகள் / சுவிசேஷ புத்தகங்கள் (மத்தேயு எழுதின சுவிசேஷம் முதல் யோவான் எழுதின சுவிசேஷம் வரையிலுள்ள நான்கு புத்தகங்கள்), வரலாறு (அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம்), பவுலின் நிருபங்கள் (ரோமருக்கு எழுதிய நிருபம் முதல் பிலேமோனுக்கு எழுதிய நிருபம் வரை), பொதுவான நிருபங்கள் (எபிரேயருக்கு எழுதின நிருபம் முதல் யூதா எழுதின நிருபம் வரை), மற்றும் தீர்க்கதரிசனம் (வெளிப்படுத்தின விசேஷம்). புதிய ஏற்பாடு ஏறக்குறைய கி.பி. 45 முதல் தோராயமாக கி.பி. 95 வரையிலுள்ள காலங்களில் எழுதப்பட்டதாகும். புதிய ஏற்பாடு பொதுவான என்னும் அர்த்தம் வருகிற கொய்னே என்னும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாகும் (இது கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க மொழியின் அன்றாட பேச்சு வழக்கில் இருந்துவந்த பொதுவான கிரேக்க மொழியாகும்).இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவரது வாழ்க்கை, ஊழியம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய விவரங்களை நற்செய்தி நூல்கள் நமக்குக் கொடுக்கின்றன. பழைய ஏற்பாட்டின் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இயேசு எவ்வாறு இருந்தார் என்பதையும், புதிய ஏற்பாட்டின் மீதமுள்ள போதனைகளுக்கு அடித்தளம் அமைப்பதையும் குறித்து சுவிசேஷ புத்தகங்கள் நிரூபிக்கின்றன. இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்க இயேசு உலகிற்கு அனுப்பிய மனிதர்களான இயேசுவின் அப்போஸ்தலர்களின் செயல்களை அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் பதிவு செய்கிறது. திருச்சபையின் ஆரம்பம் மற்றும் முதல் நூற்றாண்டில் அதன் விரைவான வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் நமக்கு உதவுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய பவுலின் நிருபங்கள் குறிப்பிட்ட திருச்சபைகளுக்கான கடிதங்களாகும் – ஆதிகாரப்பூர்வமான கிறிஸ்தவ கோட்பாடுகளையும் அந்த கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டிய நடைமுறையையும் தருகின்றன. பொதுவான நிருபங்கள் பவுலின் நிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் மேல் கூடுதல் விவரங்களை கற்பிக்கின்றன மற்றும் நடைமுறை பயன்பாட்டுடன் எடுத்துக்கூறி வலியுறுத்துகின்றன. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் இறுதி காலங்களில் இனி சம்பவிக்கப்போகும் நிகழ்வுகளை முன்னறிவிக்கிறது.
புதிய ஏற்பாட்டின் ஒரு கண்ணோட்ட ஆய்வு ஒரு சக்திவாய்ந்த மற்றும் பலனளிக்கும் ஆய்வாகும். நம்முடைய சார்பாக நமது ஸ்தானத்தில் சிலுவையில் இயேசு மரித்ததைப் பற்றியும், அவருடைய மரணத்திற்கு நம்முடைய பதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் புதிய ஏற்பாடு சொல்கிறது. புதிய ஏற்பாடு அந்த போதனையைப் பின்பற்ற வேண்டிய நடைமுறை முடிவுகளுடன் உறுதியான கிறிஸ்தவ போதனைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய ஏற்பாட்டின் பல்வேறு புத்தகங்களின் கண்ணோட்டம்/சுருக்கங்களுக்கான இணைப்புகள் கீழே உள்ளன. கிறிஸ்துவுடனான உங்கள் நடைப்பயணத்தில் எங்களது புதிய ஏற்பாட்டு கண்ணோட்ட ஆய்வு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மெய்யாகவே நாங்கள் நம்புகிறோம்.
English
மத்தேயு எழுதின சுவிசேஷம்
மாற்கு எழுதின சுவிசேஷம்
லூக்கா எழுதின சுவிசேஷம்
யோவான் எழுதின சுவிசேஷம்
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம்
ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம்
1 கொரிந்தியர் புத்தகம்
2 கொரிந்தியர் புத்தகம்
கலாத்தியருக்கு எழுதின நிருபம்
எபேசியருக்கு எழுதின நிருபம்
பிலிப்பியருக்கு எழுதின நிருபம்
கொலோசெயருக்கு எழுதின நிருபம்
1 தெசலோனிக்கேயர் புத்தகம்
2 தெசலோனிக்கேயர் புத்தகம்
1 தீமோத்தேயுவின் புத்தகம்
2 தீமோத்தேயு புத்தகம்
தீத்துவின் புத்தகம்
பிலேமோன் புத்தகம்
எபிரேயருக்கு எழுதின நிருபம்
யாக்கோபின் நிருபம்
1 பேதுருவின் புத்தகம்
2 பேதுருவின் புத்தகம்
1 யோவான் புத்தகம்
2 யோவான் புத்தகம்
3 யோவான் புத்தகம்
யூதாவின் நிருபம்
வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம்
வேதாகமம் கண்ணோட்டம்
புதிய ஏற்பாடு கண்ணோட்டம்